Massacres of Tamils - Documented by NESoHR, Published by Manitham / [Document from 1956-2008] - ''தமிழனப் படுகொலைகள்" - ஆவணப் புத்தகம்
MANITHAM - Home Page
MANITHAM : Organisation - Click to know more...MANITHAM : Documentation - Click to know more...

MANITHAM - Home Page
MANITHAM : Human Rights - Click to know more...MANITHAM : Environment - Click to know more...MANITHAM : Amnesty News Letter - Click to know more...

OPIRA

JOIN MANITHAM

URGENT APPEAL

NEWSLETTER

EVENTS

PHOTO

VIDEO

PRESS RELEASE

PUBLICATIONS

FAQ

PartnersInternshipArticlesLibraryTranslateSubmit URLArchivesSite MapContact

 

"தமிழினப் படுகொலைகள்" புத்தகம் வெளியிட தமிழகத்தில் உள்ள மனிதம் அமைப்பிற்கு அனுமதி - வடகிழக்கு மனித உரிமை செயலகம்

புரட்சி தமிழன் சத்தியராஜ் வாழ்த்து (காணொளியில் காண்க...)

Massacres of Tamils - Documented by NESoHR, Published by Manitham
[Document from 1956 - 2008]
''தமிழினப் படுகொலைகள்" - ஆவணப் புத்தகம்
ஆவண தயாரிப்பு : வடகிழக்கு மனித உரிமை செயலகம் - வெளியீடு : மனிதம்
[ஆவணம் : 1956 முதல் 2008 வரை]

 

 

உள்ளடக்கம் :

புரட்சி தமிழன் சத்தியராஜ் வாழ்த்து

"தமிழினப் படுகொலைகள்" புத்தகம் வெளியிட தமிழகத்தில் உள்ள மனிதம் அமைப்பிற்கு அனுமதியளித்துள்ளதாக வடகிழக்கு மனித உரிமை செயலகம் தனது இணையத்தளத்தில் அறிக்கை வெளியீடு
[ஊடக அறிக்கை : 14.11.2009]

"தமிழினப் படுகொலைகள்" புத்தகம் வெளியிட தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பிற்கு அனுமதியளித்துள்ளதாக வடகிழக்கு மனித உரிமை செயலகம் தனது ஆதிகார பூர்வ இணையத்தளத்தில் (http://www.nesohr.org) நவம்பர் 13 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. (வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 நவம்பர் இரண்டாம் வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வடகிழக்கு மனித உரிமை செயலகம், மனிதம் அமைப்பிற்க கடந்த 2009 ஓக்டோர்பர் மாதம் 20ம் தேதியே புத்தக வெளியீட்டிற்கான கடிதம் அளித்தது. தற்போது, இதனை உறுதி செய்யும் வகையில், தனது ஆதிகார பூர்வ இணையத்தளத்திலும் (http://www.nesohr.org) நவம்பர் 13 அன்று இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு மனித உரிமை செயலகம், கிளிநொச்சியை மையமாகக் கொண்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் பல ஆண்டுகளாய் செயல்பட்டு வந்த ஒரே மனித உரிமை அமைப்பாகும். இந்த அமைப்பு அமைதி பேச்சு வார்த்தைக்கு நடுநிலை வகித்து வந்த நார்வே நாட்டு துணையுடன் இயங்கி வந்தது குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு, 2009 கடைசி கட்ட போரின் போது, இலங்கை அரசு பன்னாட்டு நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் போர் பகுதியிலிருந்து வெளியேறி, அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு உத்தரவு பிறப்பித்திருந்த போதும், வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களும், ஊழியர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரமறுத்து, பணியாற்றி வந்தனர்.

வடகிழக்கு மனித உரிமை செயலக அமைப்பில் அங்கம் வகித்து வந்த பல தமிழர்களை, இலங்கை அரசின் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜோசப்பர ராஜ சிங்கம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரை, வடகிழக்கு மனித உரிமை செயலகம் என்ற அமைப்பை நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சிக்காக, 2005ல் கிருஸ்மஸ் நாள் அன்று கிருத்துவ கோயிலில் வைத்து இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல், மற்றொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அரிய நாயகம் சந்திரா நேரு என்றவரை இந்த அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதால் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. இத்தோடு நிற்காமல், வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் தலைவராய் இருந்த அருள் தந்தை எம்.எக்ஸ். கருணாரத்தினத்தினத்தை சிங்கள இராணுவம் ஆழ ஊடுருவும் படையை ஏவி, 20 ஏப்ரல், 2008 அன்று இவர் பயணம் செய்த காரை குண்டு வைத்து தகர்த்தது.

2009 கடைசி கட்ட போரில் இவ்வமைப்பில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டனர். பல உறுப்பினர்கள் காணாமல் போய் உள்ளனர். பலருடைய விவரம் இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது.

சில முக்கிய பொறுப்பாளர்கள் மட்டும், கடைசிகட்ட போரில் தப்பி தற்போது பல வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதி, தங்களது இருப்பிடத்தை சொல்ல மறுத்து வருகின்றனர். ஆயினும், தப்பி வந்துள்ள பொறுப்பாளர்கள் அனைவரும், கடைசி கட்டமாக நடைபெற்ற போரின் கொடூரங்களை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது முக்கிய விடயம்.

வடகிழக்கு மனித உரிமை செயலகம் நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் :

"வடகிழக்கு மனித உரிமை செயலகமும், வடகிழக்கு புள்ளிவிவர பிரிவு, கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலங்கைத்தீவில் நடத்திய மாபெரும் தமிழின அழிப்பை "Lest We Forget - பாகம் 1", கடந்த 2007-லில் ஆங்கல ஆவணத்தை இணையத்தில் வெளியிட்டோம். அதேபோல், 2005 பிற்பகுதியில் பதிவான தமிழினப் படுகொலைகளை, "Lest We Forget - பாகம் 2" என்ற ஆவணத்தை ஜீலை, 2008ல் வெளியிட்டோம்.

அக்டோபர் 2008ல் எங்களது அமைப்பின் தலைவர் அருள் தந்தை எம்.எக்ஸ். கருணாரத்தினத்தினம் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு ஐந்து மாதம் கழித்து வடகிழக்கு மனித உரிமை செயலகம், குறைந்தபட்ச வசதிகளுடன் புதுகுடியிருப்பு பகுதிக்கு நகர்ந்து அன்றாடம் நிகழ்வுகளின் அறிக்கையை வெளியிட்டு வந்தது. 2009 ஜனவரி முதல், இலங்கை இராணுவம் பிரங்கி குண்டுகளால் தாக்கியபோது, எங்களது அமைப்பின் ஊழியர்கள் அலுவலம் வர இயலாமல் போனது. பின்னர், ஊழியர்கள், வன்னி இடப்பெயர்வில் பல மாதங்கள் இருந்தனர். ஆயினும், நாங்கள் எல்லாம் ஒன்றினைந்து பணியாற்ற வழி அமைத்துக் கொண்டோம். தற்போது, வன்னியில் உள்ள மக்களை எப்படி திரும்பவும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோமோ, அதுபோல் எங்களது வடகிழக்கு மனித உரிமை செயலக ஊழியர்களை குறித்து பொது அறிக்கை வெளிடவும் பயந்து வருகிறோம்.

இந்த வேளையில், மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு, தமிழினப் படுகொலைகள் குறித்த இரண்டு ஆவணங்களையும் பல மொழிகளில் வெளியிட முன்வந்ததுள்ளது. மனிதம் அமைப்பின் இந்த பெரும் முயற்சிக்கு வடகிழக்கு மனித உரிமை செயலகம் முழு ஆதரவினை அளிப்பதோடு, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மனிதம் அமைப்பு வரும் டிசம்பர் 2009ல் புத்தகத்தை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு தமிழகத்தில் உள்ள சென்னையிலிருந்து மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் பல ஆண்டுகளாய் செயல்பட்டு வருகிறது.

இரண்டு ஆவணங்களும் தற்போது இணைக்கப்பட்டு, 2008 இறுதிவரை முடிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மனித உரிமை செயலகம், 2009ல் நடைபெற்றவைகளை குறிப்பிடப்போவது இல்லை. இருப்பினும், 2009ல் ஒரு பகுதியை நாங்கள் இந்த புத்தகத்துடன் இணைத்துள்ளோம். தமிழர் தாயகத்தில் படுபயங்கரமாய் நடத்தப்பட்ட பயங்கரவாத கலாச்சாரத்தை மிகப் பெரிய விலை கொடுத்தாவது, செய்திகளை சேகரித்து தனியே வெளியிடுவோம்", என்று வடகிழக்கு மனித உரிமை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

NESOHR OFFICIAL WEBSITE : http://www.nesohr.org
NESOHR OFFICIAL PRESS RELEASE

MANITHAM Book Related Webpage : http://www.manitham.net/nesohr/

TOP

Book to reveal Lanka's bloody past
[The New Indian Express / 06.11.2009 / Page : 2]

WITH a view to giving a comprehensive insight in to the alleged massacres committed by the Sri Lankan government against the ethnic Tamil population on the island nation since 1956, Chennaibased human rights trust Manitham will soon publish the details compiled by a local NGO in a book and release it in six languages.

Speaking to Express, Agni Subramaniam, executive director of Manitham said, "North East Secretariat on Human Rights (NESoHR) painstakingly compiled all the details with credible field verifications and gave the permission to publish the details in a book in six languages ­ Tamil, English, French, German, Sinhala and Hindi."

Famous human rights activist from the United States, Dr Ellyn Shander will write the foreword for the book, while Nanda Kandasamy, a Lankan national living in Canada has been entrusted with the designing.

NESoHR, which operated from Kilinochi with due permission from the Lankan government, complied all the harrowing details in two reports, Lest We Forget (Part 1 and II). However, the agency could not record any details of deaths or destruction during the final days of the recent Lankan war due to security concerns.

The book will not be released commercially. However, the money generated by publishing the book would be remitted back to the welfare of Lankan Tamil children affected by the ethnic war, Subramaniam said.

The book sheds light on the atrocities that the Lankan Tamils were subjected to in a so-called ethnic cleansing drive by the Sri Lankan state, long before even a single shot was fired by a Tamil militant, says Subramaniam.

Lest We Forget comprehensively recounts gory massacres like the Veeramunai Massacre (1990), Saththrukkondan Massacre (1990), Vantharumoolai Massacre (Easter n University camp) (1990), Chemmani Massgraves (1996), Krishanthi-Rape and Murder (1996) and Bindunuwewa Rehabilitation Centre Carnage (2000), in which 28 inmates, mostly children, were killed and 14 injured, even though 60 (Sinhalese) police officers were stationed there that night to `protect' the inmates.

The book is set to be published on December 10, which is celebrated around the world as Human Rights Day.

- G Saravanan | ENS / Chennai

INDIAN EXPRESS Web / E-Paper

TOP

இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ஏற்றப் போகும் ''தமிழினப் படுகொலைகள்" என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு வெளியிட அனுமதி
[ஊடக அறிக்கை : 04.11.2009]

உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists, France) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2008 வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின. கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாக செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும் கனடாவைச் சேர்ந்த, உலகில் மிகச்சிறந்த ஈழத்தமிழ் ஒவியரான திரு. நந்தா கந்தசாமி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது. இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.


தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.

புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

HOME

TOP

Manitham is aiming to bring radical changes in the society to enable individuals and communities to become self-reliant so that people may live in consonance with the true dictates of humanity in its widest scope and dimension.

 
 

MANITHAM FORUM

- Discuss Human Rights & Environ

MANITHAM - HUMAN RIGHTS
HUMAN RIGHTS

MANITHAM : Environment - Click to visit
ENVIRONMENT
Manitham - Organisation / Click to know more....
ORGANISATION
EnglishTamilUrdu

Latest News

H R News

In Media

HR Articles

Links